பூமியிலிருந்து தொலைதூரத்தில் வலம் வரும் கோளொன்று உயிரினங்களின் தாயகமாக இருக்கலாம் என்பதற்கான புதிய ஆதாரங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் நாஸா நிறுவனம் இயக்கும் James Web விண்வெளித் தொலைநோக்கி மூலம் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்விலேயே இது கண்டறியப்பட்டுள்ளது. K2-18b எனப்படும் கோளில் பூமியில் உள்ள உயிரினங்களால் மாத்திரம் உற்பத்தி செய்யப்படும் மூலக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பூமியிலிருந்து 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த நட்சத்திரத்தைச் சுற்றி வரும் K2-18b எனப்படும் ஒரு பெரிய கிரகத்தில், உயிரினங்களின் வாழ்க்கை இருப்பதற்கான வலுவான அறிகுறி இருப்பதாக கூறுகின்றனர். எக்ஸோப்ளானெட்டின் வளிமண்டலத்தின் தொடர்ச்சியான பகுப்பாய்வு, பூமியில் ஒரே ஒரு அறியப்பட்ட மூலத்தைக் கொண்ட ஒரு மூலக்கூறு மிகுதியாக இருப்பதைக் குறிக்கிறது.இந்தக் கிரகத்தில் உயிரினங்கள் வாழும் சாத்தியத்தை உறுதிப்படுத்த எதிர்காலத்தில் மேலும் பல ஆய்வுகள் மற்றும் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வானியல் நிறுவனத்தின் முன்னணி ஆராய்ச்சியாளரான பேராசிரியர் நிக்கு மதுசூதன் குறிப்பிட்டுள்ளார்.K2 – 18b பூமியை விட இரண்டரை மடங்கு பெரியது எனவும் பூமியிலிருந்து 700 டிரில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளது எனவும் குறிப்பிடப்படுகின்றது. சூரிய மண்டலத்திற்கு அப்பால் உள்ள சுமார் 5,800 கோள்கள், எக்ஸோப்ளானெட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன. அவை 1990 ஆம் ஆண்டுகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இதில் நுண்ணுயிர்கள் வாழக்கூடிய திரவ நீர், கடலால் மூடபாபட்டிருக்கும் மற்றும் ஹைட்ரஜன் நிறைந்த வளிமண்டலத்தை கொன்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2021 ஆம் ஆண்டில் ஏவப்பட்டு 2022 ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்த வெப் தொலைக்காட்டி முந்தைய அவதானிப்புகளில் k2-18b இன் வளிமண்டலத்தில் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஒக்சைடு ஆகியவற்றை அடையாளம் கண்டுள்ளன. எக்ஸொப்ளானெட்டின் வளிமண்டலத்தின் கார்பன் அடிப்படையிலான மூலக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
K2 – 18b எனும் புதிய கோளில் உயிர்கள் வாழக் கூடியதற்கான வலுவான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு
